"அமலாக்கத் துறையின் சாயம் வெளுத்துவிட்டது" - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ
தமிழ்நாடு, ராஜஸ்தான் மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பிடிபட்டதன் மூலம், ஒன்றிய பா.ஜ.க அரசின் அரசியல் கருவியான அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்துவிட்டதாக, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலங்களிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒன்றிய பா.ஜ.க அரசு நடத்திவரும் மிரட்டல் அரசியல் கடும் கண்டனத்துக்குரியது என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.