அகில இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர் தேர்தலில் வேளச்சேரி எம்.எல்.ஏ. ஹசன் மௌலானா வெற்றி பெற்றுள்ளார். தென்னிந்தியாவிற்கான பிரதிநிதியாக தேசிய ஹஜ் கமிட்டியின் உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு,
கேரளா, கர்நாடகா புதுச்சேரி லட்சத்தீவு ஆகிய ஐந்து மாநில உறுப்பினர்கள் போட்டியிடும் இந்த உறுப்பினர் தேர்தலில்,இதர நான்கு மாநிலங்களில் இருந்து யாரும் போட்டியிடாத நிலையில், ஹசன் மௌலானா ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.