பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு நெல்வாய் மற்றும் எடையார்ப்பக்கம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்த வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், பாஜக கொண்டுவரக்கூடிய அழிவுத் திட்டங்களை ஆதரிப்பதை விட்டுவிட்டு, பாஜக எதிர்ப்பின் வழியே திமுகவிற்கு வெற்றியைத் தந்த மக்களின் பக்கம் நிற்க வேண்டியது அரசின் கடமை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.