சந்திரபாபு நாயுடு மேல்முறையீடு மனு.. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-01-16 14:27 GMT

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தாக்கல் ​செய்த மனு மீது உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை கூறியுள்ளது.

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கண் அறுவை சிகிச்சைக்காக ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி சந்திரபாபு நாயுடு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம். திரிவேதி ஆகியோர், மாறுபட்ட தீர்ப்பு கூறினர். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சந்திரபாபு நாயுடுவை விசாரிக்க முறையான முன் அனுமதியை காவல்துறை பெற்றிருக்கவில்லை என்று

நீதிபதி அனிருதா போசும், காவல்துறை முன் அனுமதி பெற தேவையில்லை என நீதிபதி பேலா எம்.திரிவேதியும் கூறியுள்ளனர். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை கூறியதை தொடர்ந்து, கூடுதல் அமர்வு இந்த விவகாரத்தை விசாரிக்கும் வகையில், தலைமை நீதிபதியிடம் உரிய உத்தரவைப் பெறுவற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்