ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் புதிய அறிக்கை
இந்தியாவின் தாமிர தேவையில் 40 சதவீதத்தை தூத்துக்குடி ஆலை பூர்த்தி செய்து வருவதாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது...
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் புதிய அறிக்கை
இந்தியாவின் தாமிர தேவையில் 40 சதவீதத்தை தூத்துக்குடி ஆலை பூர்த்தி செய்து வருவதாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் நலன் கருதி, நாட்டின் தாமிர தேவையை பூர்த்தி செய்ய ஆலை மற்றும் சொத்துக்களை சிறந்த முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான விருப்பங்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் வேதாந்தா குழுமம், ஊட்டச்சத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சுகாதாரம், விலங்குகள் நலன், போன்ற சமூக திட்டங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வேதாந்தா குழுமம் 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக குறைக்க உறுதிபூண்டுள்ளதாகவும் இந்தியாவின் தாமிர தேவையில் 40 சதவீதத்தை தூத்துக்குடி ஆலை பூர்த்தி செய்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.