நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்து.. பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி | Thanthitv | R. N. Ravi

Update: 2024-10-16 13:22 GMT

இந்தியாவில் முதல் முறையாக மக்காத பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து கிராபீன் தயாரிக்கும் இயந்திரம் பெரியார் பல்கலைக்கழக இயற்பியல் துறைப் பேராசிரியர் ரமேஷ் தலைமையிலான குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளது. இதைப் பார்வையிட்டு அவர்களுக்கு ஆளுநர் பாராட்டுகளைத் தெரிவித்தார்... அதேபோல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புத்துறை மாணவர்கள் உருவாக்கியுள்ள கலைத்திறன் மிக்க ஆடைகளை பார்வையிட்ட ஆளுநர், நெசவாளர்களுக்கு உதவிடும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து மத்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படும் தொழில் அடைவு மையத்தினை பார்வையிட்ட ஆளுநர் மாணவ-மாணவியர் கல்வி பயிலும் போதே ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கிட எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்களின் முயற்சிகள் பற்றியும் கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்