"அந்த காலத்தில் சாதியே இல்லை" - ஆளுநர் பரபரப்பு பேச்சு | R.N.Ravi

Update: 2024-06-18 02:32 GMT

தாய்மொழிக் கல்வியை ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு சிதைத்ததாக ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டி உள்ளார்.

அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகநாதன் எழுதிய நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் நமது தாய்மொழிக் கல்வி நிலையங்களை மூடியபோது, வள்ளலார் பல்வேறு கல்வி நிறுவனங்களை தொடங்கி கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதாகக் கூறினார். அப்போது, சமூகத்தில் 4 பிரிவினர் மற்றும் இஸ்லாமியர்கள்தான் இருந்தார்கள் என்றும் சாதி இல்லை என்றும் அவர் கூறினார். புண்ணியமாகக் கருதப்பட்ட கல்வி கற்பிக்கும் தொழில் வணிகமயமாக அன்று இல்லை என்றும், சிறப்பாக இருந்த நம் கல்விமுறையை ஆங்கிலேயர்கள் ஆய்வுசெய்து திட்டமிட்டு அழித்தார்கள் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்