"கண்ணாடிய உடைக்க ஒரு நிமிஷம் ஆகாது" - வேட்டியை மடித்து கட்டி போலீசிடம் எகிறிய ஆர்.பி.உதயகுமார்
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மதுரை மேலக்கோட்டை மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்திக்க வந்த அ.தி.மு.கவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கண்ணாடிகளை உடைத்து விட்டு வெளியே செல்ல எவ்வளவு நேரம் ஆகிவிடும் எனக் கேள்வி எழுப்பினார்.