பார்லிமென்டில் தனியாக திடீர் மீட்டிங்.. உறுதி கொடுத்த ராகுல்.. சந்தித்தது யார்?
ரயில் ஓட்டுநர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க பாடுபடுவேன் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். ரயில்களை இயக்கம் லோகோ பைலட்டுகளுடன் நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனை நடத்திய பிறகு X சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், லட்சக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் லோகோ பைலட்களுக்கு ரயில் போதுமான வசதி இல்லை என குற்றம்சாட்டினார். லோகோ பைலட்டுகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதை உறுதி செய்வேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.