ராகுல்காந்தி, இங்கிலாந்து குடியுரிமையை வைத்துள்ளதால், அவரின் மக்களவை தேர்தல்வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி கர்நாடகா மாநில பாஜகவை சேர்ந்த விக்னேஷ் ஷிஸிர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த மனுதாரரின் வாதத்தை நிராகரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்பதும், குடியுரிமையை ரத்து செய்யக் கோருவதும் வேறுவேறு விவாரம் என்றது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய அமைப்பை நாட அறிவுறுத்தி, பொதுநல மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.