பங்குச்சந்தை முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்த ராகுல் காந்தி சதி செய்வதாக பாஜக மூத்த தலைவர் பியூஷ் கோயல் சாடியுள்ளார்.நாட்டில் மிகப்பெரிய பங்குச்சந்தை ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்துள்ள பாஜக மூத்த தலைவர் பியூஷ் கோயல், தேர்தல் தோல்வியில் இருந்து ராகுல் இன்னும் வெளிவரவில்லை என விமர்சித்தார். உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஆதாரமின்றி ராகுல் காந்தி பேசியதாக குற்றம்சாட்டிய அவர், இந்தியாவின் பங்குச் சந்தை உலகின் டாப் 5 இடங்களில் நுழைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் 67 லட்சம் கோடி ரூபாயாக இருந்த சந்தை மதிப்பு, தற்போது 415 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக பியூஷ் கோயல் சுட்டிக்காட்டினார். இதனிடையே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக இருந்த ராகுல் காந்தி, தற்போது சில்லறை முதலீட்டாளர்களின் கனவை அழிக்க திட்டமிட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.