ராகுலின் பேச்சால் வெடித்த போராட்டம்.. போலீஸ் பாஜக இடையே தள்ளு முள்ளு.. பரபரப்பு காட்சி
புதுச்சேரியில் ராகுல் காந்தியின் உருவபொம்மையை எரிக்க முயன்ற பாஜகவினருக்கும், போலீசாருக்குமிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிரதமர் மோடி ஓபிசி பிரிவில் பிறந்தவரில்லை பொதுப்பிரிவில் பிறந்தவர் என, காங்கிரஸ் எ.ம்பி ராகுல் காந்தி கூறியிருந்தார். இதனையடுத்து புதுச்சேரியில் பாஜகவினர், பிரதமர் மோடி குறித்து ராகுல்காந்தி தவறான பிரச்சாரம் செய்வதாக கூறி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ராகுல் காந்தியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால், இருதரப்புக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.