பல்லடத்தில் கடைகளை அகற்றிய அதிகாரிகள்..."திடீரென போக சொன்னால் எங்கே செல்வது?"
பல்லடத்தில் கடைகளை அகற்றிய அதிகாரிகள்..."திடீரென போக சொன்னால் எங்கே செல்வது?"..சாலையில் அழுது புலம்பும் மக்கள் - அதிர்ச்சி காட்சிகள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் என்ஜிஆர் சாலையில் தெருவோர கடைகளை அகற்ற முயன்ற நகராட்சி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பல்லடம் நகராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஆர் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இப்பகுதியில் 50க்கும் மேற்பட்டோருக்கு தள்ளுவண்டி கடைகள் அமைத்துக் கொள்ள நகராட்சி சார்பில் அடையாள அட்டையும், அவர்களின் வண்டிகளை நிறுத்த பாதுகாப்பு அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் திடீரென வந்த நகராட்சி அதிகாரிகள் பூக்கடை, பழக்கடை மற்றும் கீரை விற்பனை செய்த தெருவோர வியாபாரிகளின் கடைகளை அகற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது