"எங்கள் உறவில் அரசியல் இல்லை" - பிரியங்கா குறித்து ராகுல்காந்தி பெருமிதம்
ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் ஒரே வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது இருவரும், தங்களது குழந்தை பருவம், இளமைக்கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பிரசாரத்தில் பேசிய ராகுல்காந்தி, ரேபரேலியில் பல்வேறு இனிப்பான மற்றும் புளிப்பான நினைவுகளும் அடங்கி இருப்பதாக குறிப்பிட்டார். சிறு வயது முதலே அரசியலுடன் தங்களுக்கு ஆழமான உறவு இருந்தாலும், தங்களுக்கு இடையிலான உறவில் ஒருபோதும் அரசியல் இருந்ததே இல்லை என ராகுல்காந்தி பேசினார்.