ஆளுநரிடம் கோரிக்கை வைத்த பிரேமலதா விஜயகாந்த்

Update: 2023-09-30 16:15 GMT

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்ததாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி விவகாரத்தில் ஒரே தீர்வு நதிகள் இணைப்புதான் என குறிப்பிட்டார். மேலும், என்.எல்.சி விவகாரம், இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை குறித்தும் ஆளுநரிடம் மனு அளித்ததாக பிரேமலதா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்