மாநிலங்களவை தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் - முடிவு அறிவிப்பு
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை தலைவர் ஆளும் கட்சியின் செய்தி தொடர்பாளர் போல செயல்படுவதாகவும், ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக கடந்த10 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீதான முடிவு அறிவிக்கப்படாமல் இருந்தது. இன்று அது தொடர்பான முடிவை மாநிலங்களவை பொதுச் செயலாளர், அவையில் தாக்கல் செய்தார். ஜெகதீப் தங்கருக்கு எதிரான எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயன் சிங் நிராகரித்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் பெறுவதற்கு, உண்மைகளுக்கு புறம்பாக எதிர்க்கட்சிகள் வழங்கிய நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் அமைந்திருப்பதாக மாநிலங்களவை துணைத்தலைவர் தீர்மானத்தை நிராகரிப்பதற்கான காரணங்களாக குறிப்பிட்டுள்ளார்.