"கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் ஆட்சியை அகற்ற ஒன்றிணைவோம்" - பி.ஆர்.பாண்டியன்

Update: 2024-06-10 14:15 GMT

இந்தியா முழுவதும் விவசாயிகள், மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளதாக, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விவசாயிகள் நீதி கேட்டு பேரணியில் ஈடுபட்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன், தற்போது அமைந்துள்ளது மோடி அரசு அல்ல... தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்றும், இனியும் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காவிட்டால், இந்த ஆட்சியை அகற்ற ஒன்றிணைவோம் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்