தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பெண்களிடையே பரவும் எண்ணற்ற தொற்று நோய் குறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான 9 ஆயிரத்து 600 கோடிக்கும் மேலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தூய்மை இந்தியா இயக்கத்தின் இந்தப் பயணம் கோடிக்கணக்கான இந்தியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு சின்னமாக திகழ்வதாக குறிப்பிட்டார். தூய்மை இந்தியா திட்டம் சாமானிய மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் விலைமதிப்பற்றது எனவும் வளர்ச்சிக்கான புதிய பாதையாக தூய்மை உருவெடுத்து இருப்பதாகவும் கூறினார். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பெண்களிடையே பரவும் எண்ணற்ற தொற்று நோய் குறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.