காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற தெற்குலகின் குரல் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். பருவநிலை மாற்றத்துடன், சுகாதார பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பற்றிய கவலைகளும்
எழுந்திருப்பதாக குறிப்பிட்டார் பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவை நமது சமூகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக திகழ்வதாக தெரிவித்த பிரதமர், எல்லா இடங்களிலும் நிச்சயமற்ற தன்மை உருவாகி இருப்பதாக குறிப்பிட்டார். இந்தியா தனது நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை தெற்கு உலக நாடுகளோடு பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.