அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான கால்கோள் விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விஜயதாரணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், வருகிற 18ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் வரும் 19 ஆம் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் கலந்து கொள்ள உள்ளதாக கூறினார்.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தேர்தல் தேதி அறிவித்த பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.