பிரதமர் மோடி, தேர்தல் ஆணையம் மீது நீதிபதி அரி பரந்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு
மக்களவைத் தேர்தல் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன், மக்களவைத் தேர்தலில் தீர்ப்பை திருடி விட்டார்கள் என்று கூறினார். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குபதிவு விவரங்களை வாக்குச்சாவடி முகவர்களிடம் ஏன் வழங்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமிப்பதால்தான், மத்திய அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையர்கள் செயல்படுகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.