தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், விதிமுறைகளுக்கு புறம்பாக, கோவையில் தேர்தல் பரப்புரையில் பள்ளி மாணவர்களை பாஜக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெறுப்பை தூண்டும் வகையில் திமுக குறித்து அவதூறாக பேசியதாகவும் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார். இந்த இரண்டு விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் திமுக வழக்கறிஞர் சரவணன் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்தார்