நாடாளுமன்ற தேர்தல்.. அண்ணாமலை அதிரடி உத்தரவு

Update: 2023-11-29 03:12 GMT

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கி உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமனம் செய்து தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.

இந்த சூழலில் பா.ஜ.க. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் தொகுதிக்கு என்.எல்.நாகராஜன், தென்சென்னைக்கு பாஸ்கர், மத்திய சென்னைக்கு ஜி.ராதாகிருஷ்ணன், சேலத்துக்கு கே.பி. ராமலிங்கம், சிதம்பரத்துக்கு எஸ்.ஜி.சூர்யா, தூத்துக்குடிக்கு மகாராஜன், தென்காசிக்கு பொன். ராதாகிருஷ்ணன் உள்பட 39 பொறுப்பாளர்களை நியமனம் செய்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்