"எது தமிழ்நாட்டுல 2 கோடி பேருக்கு அரசு வேலை தருவீங்களா? கணக்கு இடிக்குதே அண்ணாமலை" - பிடிஆர்

Update: 2024-02-06 16:05 GMT

2026-இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்ததும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படுமென பாஜக கூறுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள், ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3-இல் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுமா அல்லது வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்