ஒடிசா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.புவனேஸ்வரில், ராஜ்நாத் சிங் மற்றும் பூபேந்தர் யாதவ் முன்னிலையில் ஒடிசா மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மோகன் சரண் மாஜி முதலமைச்சராகவும், கே.வி.சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோர் துணை முதல்வர்களாகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 52 வயதான மோகன் சரண் மாஜி பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். தொடர்ந்து, 4வது முறையாக எம்எல்ஏவாக இருக்கும் மோகன் மாஜி, கியோன்ஜ்ஹர் தொகுதியில் போட்டியிட்டு11 ஆயிரத்து 577 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இன்று புவனேஸ்வரில் நடைபெற கூடிய பதவியேற்பு விழாவில் ஒடிசா மாநிலத்தின் முதல் பாஜக முதலமைச்சராக மோகன் சரண் மாஜி பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.