"நாட்டின் எதிரியாக மோடி அரசு மாறிவிட்டது" ராகுல் காந்தி X தலத்தில் பரபரப்பு ட்வீட்

Update: 2024-02-27 16:17 GMT

இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில், நாட்டின் சில இடங்களில் மாணவர்கள் வினாத்தாள் கசிவால் விரக்தியடைந்துள்ளதாகவும், சில இடங்களில் தங்களின் குரலை உயர்த்தியதற்காக தடியடிக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். காவல்துறை ஆட்சேர்ப்பிலிருந்து ராணுவ ஆட்சேர்ப்பு வரை, சிறிய அளவிலான தேர்வுகளை கூட பாஜக அரசால் நியாயமாக நடத்த முடியவில்லை என கூறியுள்ள அவர், இது இளைஞர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். வேலை உருவாக்கும் நிறுவனங்களை தனது நண்பர்களுக்கு விற்றுவிட்டு, ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதே மோடியின் கொள்கை எனவும், சுரண்டல் மோடியின் உத்தரவாதம் எனவும் ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளை அலட்சியப்படுத்தி, நம்பிக்கை கீற்றை அவர்களிடமிருந்து மோடி அரசு பறித்துவிட்டதாகவும் கூறியுள்ள ராகுல் காந்தி, இந்த குற்றங்களுக்காக நரேந்திர மோடியை, வரலாறு ஒருபோதும் மன்னிக்காது எனவும் சாடியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்