மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் தமிழக அரசு சரியாக செயல்படுவதில்லை என மத்திய இணை அமைச்சர் கிசன் ரெட்டி குற்றம்சட்டியுள்ளார். கோவையில் மத்திய பட்ஜெட் குறித்து நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு பேசிய கிசன் ரெட்டி, தமிழக பட்ஜெட்டில், 38 மாவட்டங்களில் 27 மாவட்டங்களின் பெயரை குறிப்பிடவில்லை எனவும், இதனால் அந்த மாவட்டங்களை புறக்கணிப்பதாக எடுத்துக்கொள்ளலாமா என கேள்வி எழுப்பினார். பின்னர் பேசிய அண்ணாமலை, மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு மத்திய அரசு மட்டுமே 100 சதவீத நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாக சாடினார்.