இந்து சமய அறநிலையத்துறை முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு

Update: 2024-07-28 12:20 GMT

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் இந்து சமய அறநிலையத் துறை மூலம் பல அரும்பணிகள் செய்திட நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக அரசு பாராட்டியுள்ளது...

ஆயிரத்து 355 கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டதுடன்...

3 ஆயிரத்து 776 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 ஆயிரத்து 436 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...

50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிராமப்புற - ஆதிராவிடர் கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளதாகவும்...

62 கோடியே 76 லட்ச ரூபாய் மதிப்பில் கோவில்களில் ராஜகோபுர பணிகள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...

80 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பழனி - இடும்பன்மலை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், கோயில்களில் கம்பிவட ஊர்தி வசதி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,

5 ஆயிரத்து 577 கோடி ரூபாய் மதிப்புடைய ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...

411 கோடியே 45 லட்ச ரூபாய் மதிப்பில் திருமண மண்டபங்கள், குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,

39 கோடியே 56 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய பசுமடங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

6 கோயில்களுக்கு சொந்தமான 191 கோடியே 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டு வட்டி பெற்று வருவதாகவும்,

சுவாமிமலை முருகன் கோலுக்கு மின்தூக்கி வசதி,

அரசு செலவில் பக்தர்களுக்கு இராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...

11 பெண் ஓதுவார் உட்பட 42 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்