ஓங்கி அடித்த `மிக்ஜாம்' புயல்.. மத்திய அரசுக்கு MP T.R. பாலு வைத்த கோரிக்கை
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ளம் காரணமாக 1.2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இத்தகைய நிலையை மத்திய அரசு தேசிய இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். வெள்ளத்திற்கு இதுவரை 17 பேர் பலியானதாகவும், பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழுவை உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். இதனிடையே, தி.மு.க எம்.பி செந்தில்குமார் பேசிய பேச்சை முதல்வர் ஸ்டாலின் கண்டித்துள்ளதாகவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டி.ஆர்.பாலு குறிப்பிட்டார்.
தமிழக வெள்ள பாதிப்புகளை மத்திய அரசு, தேசிய இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டுமென, மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.