நேரில் ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜி... `நவ., 7' நீதிபதி அதிரடி உத்தரவு

Update: 2024-10-29 14:49 GMT

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணைக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.

அப்போது, அமலாக்கத் துறை சாட்சியான தடயவியல் துறை கணினிப் பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.

குறுக்கு விசாரணை நிறைவடையாததை அடுத்து, விசாரணையை நவம்பர் 7-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அன்றைய தினம் தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்

Tags:    

மேலும் செய்திகள்