"வள்ளுவரை வம்புக்கு இழுத்திருக்கிறார்"...ஆளுநருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி

Update: 2024-01-16 16:19 GMT

திருவள்ளுவர் குறித்த தமிழக ஆளுநரின் பதிவுக்கு பதிலடியாக அமைச்சர் ரகுபதி, சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கடந்தாண்டு தமிழ்நாடு பெயர் சர்ச்சையில் சிக்கி தமிழர்களின் எதிர்ப்புகளுக்கு தலைபணிந்த ஆளுநர் ரவி, இந்த ஆண்டு வள்ளுவரை வம்புக்கு இழுத்திருப்பதாக கூறியுள்ளார். பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு வந்த பணிகளைச் செய்யாமல், கையில் கிடைக்கும் அனைத்துக்கும் காவிச் சாயம் பூசிக் கொண்டிருப்பதாக, ஆளுநரை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். வேதநெறிக்கு எதிரான குறள்நெறி கூறிய அய்யன் வள்ளுவரின் வரலாறே தெரியாமல், ஆளுநராக வந்ததாலேயே தான் சொல்வதெல்லாம் வேதம் என்பதைப் போல உருட்டிக் கொண்டிருக்கும் ஆளுநர், உடனே காவிக் கட்சியில் சேர்ந்துவிட்டு அரசியல் பேசலாம் என கூறியுள்ள அவர், அதற்கு காலதாமதமாகும் என்றால், திருவள்ளுவர் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாமல் பேசுவதை விடுத்து, அரசியல் சட்டப்படி நடக்க முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்