மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகளை தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் ஆய்வு செய்தார். மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள நிலத்தில் டைடல் பார்க் அமைய உள்ள நிலையில் அங்கும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, 12 தளங்கள், 60மீட்டர் உயரத்தில் டைடல் பார்க் அமைய உள்ளதாக கூறினார். இதற்கான நிலஎடுப்பு, டெண்டர் பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறிய அமைச்சர், விரைவில் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 2026ல் பணிகள் நிறைவடையும் என்று கூறினார்.