சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்ததுமே வெடித்த மோதல்... வரிந்து கட்டிய காங்., அதிர்ந்த அவை

Update: 2024-06-26 13:29 GMT

நாடாளுமன்ற சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த கட்சி தலைவர்களுக்கு ஓம் பிர்லா நன்றி தெரிவித்து பேசினார். அப்போது 1975-ல் இந்திரா காந்தி எமர்ஜென்சி அமல்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார். 1975 ஜூன் 25 இந்திய வரலாற்றில் கருப்பு அத்தியாயமாக இருக்கும் என்றவர், அம்பேத்கர் உருவாக்கிய அரசியல்சாசனம் மீது இந்திரா காந்தி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டினார். ஜனநாயகத்தின் தாயாக அறியப்பட்ட இந்தியாவில், இந்திரா காந்தி சர்வாதிகாரத்தை திணித்ததாகவும், ஜனநாயக மாண்புகள் நசுக்கப்பட்டதாகவும் காட்டமாக விமர்சித்தார். எமர்ஜென்சியில் சர்வாதிகார காங்கிரஸ் கைகளால் உயிரிழந்தவர்கள் பலர் எனவும் குறிப்பிட்டார். ஓம் பிர்லா இந்திரா காந்தி குறித்து பேசிக்கொண்டிருந்த போதே, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. சர்வாதிகாரத்தை நிறுத்து, வெட்கக்கேடு, வெட்கக்கேடு என எதிர்க்கட்சியினர் முழக்கம் ஏற்பட்டனர். ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு, நாற்காலியில் அமர்ந்த முதல் நாளிலேயே அவருக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்