மத்திய அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா

Update: 2024-09-07 16:04 GMT

கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொன்விழா நகரில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் 7 அடி உயர சக்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதேபோல மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் உள்பட சுற்றி உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்