குஷ்பு பரபரப்பு பதிவு.. பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து நடிகை குஷ்பு பதிவு
பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பெண்கள் வெளிவந்து பேச வேண்டுமென குஷ்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஹேமா கமிட்டி விவகாரத்தில், ஒரு பெண்ணாகவும், தாயாகவும் இத்தகைய சம்பவங்கள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக அனைத்து ஆண்களும் நிற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அனைவரும் விழித்துக் கொள்வதற்கான நேரம் இது என்றும், இத்தகைய பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் இத்துடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.