"இதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.." "முழுமூச்சோடு இறங்குவோம்" - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

Update: 2024-07-16 12:06 GMT

காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகா அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சிகளின் கருத்துகளை கேட்டறிந்தார். காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்வதோடு, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும் என உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்