ஒரே என்ட்ரி.. அதிர்ந்த குமரி.. ஆர்ப்பரித்த தொண்டர்களின் ஆரவாரம்.. மேடையில் கர்ஜித்த மோடி..

Update: 2024-03-16 02:44 GMT

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், விஜயதாரணி, அண்மையில் பா.ஜ.க.வில் ச.ம.க.வை இணைத்த சரத்குமார், அவரது மனைவி ராதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மக்களை கொள்ளையடிக்கவே எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க நினைப்பதாக குற்றம் சாட்டினார். இந்தியா கூட்டணிக்கட்சிகளின் கர்வத்தை தமிழகம் அடக்கும் என்றும், நாட்டை துண்டாட வேண்டும் என்று நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கியெறிந்துவிட்டார்கள் என்றும் மோடி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்