2029க்கு பின் மாநிலங்களில் மாற்றமா..? கடும் எதிர்ப்பு- நிறைவேற்றிய மத்திய அரசு .. அடுத்து என்ன..?

Update: 2024-09-22 09:52 GMT

2029ம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கு ஒரு சேர தேர்தல் நடப்பது சாத்தியமா?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

'ஒரே நாடு ஒரே தேர்தல்'க்கான பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது...

இந்நிலையில், தேர்தல் வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து இதுவரை தமிழ்நாட்டில் மக்களவை, சட்டப் பேரவைகளுக்கு 5 முறை தொடர்ச்சியாக ஒருசேர வாக்குப் பதிவு நடந்துள்ளது...

1998ஆம் ஆண்டு மத்தியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் தமிழ்நாட்டில் மக்களவை, சட்டப் பேரவைக்கான தேதிகள் முற்றிலும் மாறிப் போனது..

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் மக்களவைக்கு 1998, 1999, 2004, 2009, 2014, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் தேர்தல்கள் நடைபெற்றன...

மாநில சட்டப் பேரவைக்கோ 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு, 2001, 2006, 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் தேர்தல்கள் நடைபெற்றன...

'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான ஆய்வுக்குழு பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில்...

அனைத்துத் தரப்பின் ஆலோசனைகள், கருத்துகள் என நீண்ட நடைமுறைகளுக்குப் பிறகு 2029ஆம் ஆண்டு இந்த நடைமுறை கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது...

ஒருவேளை இந்த தேர்தல் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், அது தமிழ்நாட்டிலும் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டால்...

தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான விவிபேட் இயந்திரங்களின் தேவைகள் இருமடங்காக அதிகரிக்கும்...

கடந்த மக்களவைத் தேர்தலில் 81,157 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 86,858 விவிபேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன...

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நடைமுறைக்கு வரும் காலத்தில், வாக்காளர்கள், வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்...

வேட்பாளர்களின் பெயர்களைக் கொண்ட மின்னணு பதிவு இயந்திரங்களின் தேவை இருமடங்காககும்...

சட்டப் பேரவை, மக்களவை என இரண்டுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப் பதிவு நடப்பதால்... சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகும்...

ஆனாலும், வாக்குச் சாவடிகள், தேர்தல் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் பெரிய மாற்றங்களை உருவாக்கத் தேவையில்லை...

ஒரே வாக்குச் சாவடிக்குள்ளாகவே தேர்தல்கள் நடப்பதால் ஊழியர்கள், காவலர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை மக்களவை, சட்டப் பேரவை என்று இல்லாமல் ஒற்றைத் தேர்தலாகவே கணக்கில் கொள்ளப்படும்...

அதாவது ஒரு வாக்குச் சாவடிக்குள்ளேயே 2 அமைப்புகளுக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும்...

அதனை கண்காணிக்கும் பொறுப்புள்ள வாக்குச் சாவடி அலுவலர்கள் எப்போதும் போன்று நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையிலேயே இருப்பார்கள்...

"ஒரே நாடு ஒரே தேர்தல்" என்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில்... தேர்தல் அட்டவணை தேர்தல் ஆணையத்தால் எப்போது வெளியிடப்படுமோ என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்