"இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் இது நிச்சயம் நடக்கும்" | ramanathapuram | India
"இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் இது நிச்சயம் நடக்கும்"
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று, ராமநாதபுரம் எம்.பி.யும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளருமான நவாஸ்கனி தெரிவத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், தேர்தலில் தனக்கு ஆதரவு கேட்டு, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மீனவர்கள் கைது பிரச்சினையை பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டினார். கைது நடவடிக்கையை தடுக்க, கட்சத்தீவை மீட்க வேண்டும் என்றும், இல்லையென்றால், மீன்பிடி உரிமையை நீண்ட கால குத்தகைக்காவது பெற வேண்டும் என்றார். இதை, இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் நிச்சயமாக செய்யும் என்றும் நவாஸ் கனி தெரிவித்தார்.