புதுச்சேரி மக்களுக்கு - முதல்வர் ரங்கசாமி சொன்ன சேதி

Update: 2024-08-15 10:33 GMT

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில், தேசிய கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ரங்கசாமி ஏற்றுக் கொண்டார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளைம் வழங்கி கவுரவித்தார். பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. புதுச்சேரியில் உலக தமிழ் மாநாட்டை நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தரமான குடிநீர், தடையில்லா மின்சாரம் வழங்கும் மாநிலமாக புதுச்சேரி மாநிலம் திகழ்ந்து வருவதாக சுதந்திர தின உரையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்