"அயோத்தி கும்பாபிஷேகத்தை எதிர்த்தால்.." - காங்கிரசுக்கு அதிர்ச்சி தந்த `சாதி' அமைப்பு

Update: 2024-01-11 08:21 GMT

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதில்லை என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ள நிலையில் இவ்விழாவை புறக்கணிப்பது தெய்வ நிந்தனைக்கு சமம் என கேரள நாயர் சாதி அமைப்பு விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பது ஒவ்வொரு இறை விசுவாசியின் கடமை எனவும் அதற்கு சாதியையோ மதத்தையோ பார்க்க வேண்டியதில்லை எனவும், விழாவை புறக்கணிப்பது தெய்வ நிந்தனைக்கு சமம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியல் கட்சிகள் அல்லது அமைப்புகள் அயோத்தி கும்பாபிஷேகத்தை எதிர்த்தால், அது அவர்களின் சுயநலம் மற்றும் அரசியல் ஆதாயங்களால் மட்டுமே இருக்கும் என்றும் அவர் சாடியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்