"காஷ்மீர் அமைதி நிலவினால் முப்தி வீட்டுக்காவல் எதற்கு?"..முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி
காஷ்மீரில் அமைதி நிலவினால் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தியை வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஏன்? என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 4 ஆண்டுகளுக்கு முன் அரசியல் சாசனத்தின் 370ஆம் பிரிவை நீக்கிய பிறகு, காஷ்மீரில் அமைதி நிலவுவதாக மத்திய பாஜக அரசு கொண்டாடுவதாகத் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்றால், முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தியை ஏன் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள்? என்றும், காஷ்மீரின் இரண்டு முக்கிய கட்சிகளின் அலுவலகங்களுக்கு ஏன் பூட்டுப் போட்டிருக்கிறார்கள்? எனவும், ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.