"யார் என்ன விமர்சனம், கேலி செய்தாலும் கவலை இல்லை" - .அமைச்சர் உதயநிதி பரபரப்பு பேட்டி
திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி நாளை மறுநாள் நடத்தும் நீட் தேர்விற்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்திற்கு, என்ன விமர்சனம் வந்தாலும் தமிழ்நாடு அமைச்சர்களும் தானும் கலந்து கொள்ளப் போவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார். நீட் தேர்வை ஒழிப்பதற்கான முழு பொறுப்பையும் தான் உணர்வதைப் போல, மக்களும் உணர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.