அதிமுக ஆட்சியின் திட்டங்களை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மேலும் சிறப்பாகச் செயல்படுத்துகிறது என்று திமுக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக நிறைவேற்றிய திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறும் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததால், அம்மா உணவு திட்டத்தை உடனே மூடிவிடுவார்கள் என்று அதிமுகவினர் கூறிவந்தது போல் அத்திட்டம் மூடப்படவில்லை என்றும்,
மாறாக 250 கோடி ரூபாயும், கடந்த வாரம் 21 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கொண்டுவந்த திட்டம் என்பதற்காக எந்த ஒரு திட்டத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணிக்கவில்லை என்றும், மாறாக, கூடுதல் நிதி ஒதுக்கிச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு திட்டமும் மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் அது திட்டத்தை மேலும் சிறப்புடன் நிறைவேற்றுவதையே திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.