மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகள் வழங்க, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களுக்கு செல்கிறார். சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை விமானம் மூலம் மதுரை செல்லும் அவர், அங்கிருந்து நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களுக்கு செல்கிறார். அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குகிறார்.