ஈபிஎஸ்-யின் அறிவிப்பும்.. இது தான் காரணம்.. அமைச்சர் சொன்ன கணக்கு | EPS | ADMK | Thanthitv
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததே திமுகவுக்கு கிடைத்த முதல் வெற்றி என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். குவைத் தீ விபத்தில் உயிரிழந்த முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரையின் குடும்பத்தினரிடம், 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான காசோலையை எம்ஆர்கே பன்னீர் செல்வம் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்றார். அதிமுக ஏன் தேர்தலில் நிற்கவில்லை என்பது இன்னும் சில காலங்கள் கழித்தே தெரியும் என்றும், எல்லாம் ஒரு கணக்காகவே இருக்கும் என்றும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் கூறினார்...