தேர்தல் ரிசல்ட்.. இன்று தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-06-05 09:45 GMT

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரங்களை பத்திரிகை விளம்பரத்தில் வெளியிடக் கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்குமாறு, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட பொன் குமரன் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தப்படவில்லை என்றும், அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 38வது பிரிவின்படி வேட்பாளர்களின் விவரங்கள், விரிவாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்படவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வாக்கு எண்ணிக்கை நேற்று முடிவடைந்த நிலையில் இந்த வழக்கு எப்படி செல்லுபடியாகும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, மனுதாரர் அளித்த புகார் மனுக்களை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுதாரரின் புகார் மனுக்களை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்