ராஜினாமா செய்த தேர்தல் ஆணையருக்கு மம்தா திடீர் பாராட்டு | Mamata Banerjee
தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்துள்ள அருண் கோயலை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாராட்டியுள்ளார். அருண் கோயலின் ராஜினாமா, மக்களவை தேர்தலில் பாஜக வாக்குகளை கொள்ளையடிக்க முயற்சிப்பதையே நிரூபிக்கிறது என்று கூறினார். டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் மற்றும் அவர்களின் முதலாளிகளின் அழுத்தத்திற்கு அடிபணியாத அருண் கோயலுக்கு தனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் மம்தா பானர்ஜி கூறினார்.