கட்டுக்கட்டாக வந்த 2 கோடி ரூபாய்.. தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி.. விசாரணையில் வந்த பகீர் தகவல்

Update: 2024-04-16 16:54 GMT

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஹெப்பகோடி பகுதியில் உள்ள ஹோட்டல் முன்பு ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரை சந்தேகத்தின் பேரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது, அதில், 2 கோடியே 93 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் இருந்தது தெரிய வந்தது. இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பணம் முழுவதையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இந்த கார் சிஎம்எஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும், ஏடிஎம்களில் நிரப்புவதற்காக பணத்தை எடுத்து சென்றது தெரிய வந்தது. அதேபோல், துப்பாக்கி ஏந்திய செக்யூரிட்டி யாரும் இல்லாமல் பணத்தை கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்