கடிதத்தை பார்த்து கொதிப்படைந்த ஈபிஎஸ்

Update: 2024-07-26 06:55 GMT

சென்னையில் ஃபார்முலா கார் பந்தயம் நடத்த ஸ்பான்சர்ஷிப் வழங்க தொழில் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதால், தொழில் அமைப்புகள் கொதிப்படைந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இரண்டாண்டுகளுக்கு சென்னையில் ஃபார்முலா கார் பந்தயத்தை நடத்த மாட்டோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி பத்திரம் தந்துவிட்டு, இப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ஃபார்முலா கார் பந்தயத்தை சென்னை மாநகரில் நடத்துவதற்காக 'ஸ்பான்சர்ஷிப்' வேண்டி நேர்முகக் கடிதம் எழுதிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிர்பந்தத்தால் பல்வேறு தொழில் அமைப்புகள் கொதிப்படைந்துள்ளன என குறிப்பிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் மூன்று முறை உயர்த்தப்பட்ட மின் கட்டண அதிகரிப்பால் சிறு, குறு தொழிற்சாலைகள் கடுமையாக பாதிப்படைந்து தொழிற்துறை முடங்கியுள்ளது, இந்த நிலையில், திமுக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்முலா கார் பந்தயத்தை நடத்திட ஸ்பான்சர்ஷிப் வழங்க வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்